கருணாவுக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்குமாறு ஐ.நா.கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது.

குறித்த ருவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  “சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் செயலைச்  கருணா செய்துள்ளார்.

அதாவது, சிறுவர் படையினரை மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்ய சதி செய்ததற்காக கருணா அம்மான் மீது வழக்குத் தொடர வேண்டும்.

அந்தவகையில் கருணா அம்மான் மீதான விசாரணைக்கு நாங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளோம்.

அதற்கமைய கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், சிறுவர்களை படையில் இணைத்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக  கருணாவிடம் விசாரணை முன்னெடுக்க  வேண்டும்.

இலங்கையிலுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கூறல் பொருந்த வேண்டும்” என  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில்  2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக  கருணா அம்மான், அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்த கருந்து தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.