பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீமிதிப்பு நிகழ்வானது இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் மஞ்சள் குளிப்பதற்காக கடலுக்கு சென்று அங்கிருந்து நேரடியாக ஆலயத்திற்கு வந்து
அம்பாளின் தீமிதிப்பு வைபவத்தில் இடம்பெற்றது.

இக் காலத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆலயத்தில் அனைத்து பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றது மேலும் குறைந்தளவான பக்தர்களே இந்த தீமிதிப்பு நிகழ்வில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தீமிதிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து மதுக்கொடுத்தல், சாட்டையடித்தல் போன்ற சடங்கு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.