மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு..

உலக அளவில் மருத்துவத்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் புதிது புதிதாக உருவாகி வரும் நோய் நிலைகளில் இருந்து மனித உயிர்களை காக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அந்தவகையில் உயிர் காக்கும் குருதிக் கொடை காலத்தின் அவசியமான ஒன்றாக அமைகின்றது. அந்த வகையில் அதன் முக்கியத்துவம் கருதி யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 27.06.2020 அதாவது நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் – 2.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் குருதிக் கொடை நிகழ்வில் குருதித்தானம் வழங்க விரும்புபவர்களை கலந்து சிறப்பிக்குமாறு  அன்பாக அழைத்து நிற்கின்றோம்.

தகவல்
என்.எம்.அப்துல்லாஹ்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.