நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கமநல சேவை பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா பூலக்காடு மற்றும் பொண்டுகள்சேனை பகுதியில் இன்று இடம்பெற்றது.

பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.மனோதர்ஷன் தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், கோறளைப்பற்று தெற்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா, விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட விவசாய அமைப்பினர், கிராம மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பூலக்காடு மற்றும் பொண்டுகள்சேனை பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை செய்யப்பட்டிருந்த நிலையில் நஞ்சற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிலக்கடலை உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெற்ற நிலக்கடலை அறுவடை செய்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதி விவசாயிகளுக்கு பிரதேச விவசாய திணைக்களத்தினால் ஐம்பது வீதமளவில் நிலக்கடலை வழங்கப்பட்டிருந்தது. கடந்த வருடத்தினை விட இம்முறை அதிகளவு விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தங்களால் அறுவடை செய்யப்படும் நிலக்கடலையை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நிர்ணய விலை எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை இலகுவான முறையில் நிலக்கடலையை அறுவடை செய்து பிரித்தெடுப்பதற்கான இயந்திரம் தேவையாகவுள்ளதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.