தம்பலகாம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார் .
ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூப் அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் ஐ.நஜீமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று(25) முள்ளிப்பொத்தானை நகரில் இடம்பெற்றது.இதன் போது குறித்த உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

இக் குறித்த சந்திப்பில், முன்னாள் தவிசாளரும் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினருமான தாலிப் அலி ஹாஜியார், தம்பலகாமம் பிரதேச சபையின்  உறுப்பினர்களான ஹமீட் றஹீம், ஆர்.எம்.றெஜீன், ஆசிரியர் ஐயூப் கான் மற்றும் கட்சிப் பிரமுகர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்