வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்றே இன்று காலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

அதாவது,  எதிரில் வந்த பாரஊர்தியின் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே, இந்த விபத்து ஏற்பட்டதாக பேருந்தின்நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.