முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா

இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் பிரசார மேடை ஒன்றிலேயே இராணுவத்தினர் தொடர்பாக பேசியிருந்தேன்.

இதற்காக கைது செய்ய வேண்டுமென சட்டத்தில் எதுவும் கூறப்பட்டு இல்லை. நாட்டில் மாற்றம் ஒன்று வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே மிதவாதம் என்ற போக்கில் கதைத்திருந்தேன்.

அதாவது அன்றைய தினம், நான் பேசிய முழுமையான காணொளியை பார்த்தால் தெரியும் இராணுவத்தையோ சிங்கள மக்களையோ அல்லது சிங்கள மத குருமார்களையோ குறைத்து பேசியுள்ளேனா என்பது தெரியும்.

அதாவது நான் பேசிய முழுமையான காணொளியை ஒளிபரப்பாமல், இடையில் பேசிய 2நிமிட காணொளியை மாத்திரம் ஒளிபரப்பியமையாலேயே இவ்வாறான பிரச்சினை உருவாகியுள்ளது.

அந்தவகையில் கோட்டவின் வாக்குகளை சிதறடிக்க சஜித் மேற்கொண்ட சதித்திட்டமே இது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.