அண்டை நாடுகளுக்கு முன்பாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் – ரமேஷ் பதிரன

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முன்பாக இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதார வேலைத்திட்டங்கள் உள்ளன என்றும் கூறினார்.

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 6.1 மில்லியன் குடும்பங்களுக்கு 60 பில்லியனுக்கும் அதிகமான நிவாரணத்தை அரசாங்கம் வழங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் அனைவரும் தனிப்பட்ட செலவுகளைக் குறைப்பதன் மூலம் முன்மாதிரியான பங்கைக் கொண்டிருந்தனர் என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரன குறிப்பிட்டார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இலங்கை தனது பொருளாதாரத்தை அண்டை நாடுகளுக்கு முன்பாக மீட்டெடுக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் நம்பிக்கைக்கு வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.