வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்களே இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாக அத் திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்