“மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது”

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நிலவும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தபோதும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

2015 மற்றும் 2019 ஐ ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக தற்போதைய அரசாங்கம் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இரு ஆண்டுகளுடனும் ஒப்பிடும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறிப்பாக 2015 இல் அதிகமாக இருந்தது என கூறினார்.

கடினமான சவால்களுக்கு மத்தியில் ஏழை மக்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்க இந்த அரசாங்கம் தவறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்