மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா? ஜனாதிபதி விளக்க வேண்டும் என்கின்றார் கிரியெல்ல

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா என ஜனாதிபதி விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எம்.சி.சி ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக உறுதியளித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பாக பலர்கள் வெவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதாகக் கூறிய அவர், இது குறித்த சரியான பதிலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும் எம்.சி.சி ஒப்பந்தம் நிராகரிக்கப்படுகிறதா இல்லையா என்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததாகக் கூறி, இந்த கேள்விகளை எழுப்ப பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.