கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்யப்பட்டன – பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தம் தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொம்பே பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், அந்த தியாகங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் அடங்கும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தங்கள் வேட்பாளராக நிறுத்துமாறு ஸ்ரீ.ல.சு.க.வின் ஆலோசனையை தான் எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.

தேர்தலில் பெரும்பானமையை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனாலேயே அவர்கள் எம்மோடு இணைந்து கொண்டார்கள் என சுட்டிக்காட்டிய பிரசன்ன ரணதுங்க அவர்கள் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு, கடந்த காலத்தில் ஸ்ரீ.ல.சு.க.வின் ஒரு பகுதியினராக இருந்தனர் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மொட்டு சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பியதால், ஸ்ரீ.ல.சு.க.வின் மாவட்ட பிரதிநிதிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மொட்டு சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள் ஒரு நிலையான கருத்தை கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஸ்ரீ.ல.சு.க.யின் மாவட்ட பிரதிநிதிகள் கூறி வருவதையும் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.