ஐ.சி.சி.யிடம் ஆட்டநிர்ணய சதி குறித்த ஆதாரங்கள்- மஹிந்தானந்த

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின்போது, ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நேற்று இரவு தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி, இவ்விடயம் தொடர்பாக வாக்குமூலமொன்றையும் ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினர் பதிவு செய்ததாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையில் பலமான வீரர்கள் இருந்தும் சில அதிகாரிகளின் செயற்பாடு காரணமாகவே இலங்கையால் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாமல்போனதாக  மஹிந்தானந்த அளுத்கமகே  அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து இலங்கையில் மட்டுமின்றி உலகளவில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்குமாறு ஐ.சி.சி வலியுறுத்தி இருந்தது.

அதனடிப்படையில் தற்போது  ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினர் இந்த விடயம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்