தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது மக்கள் விடுதலை முன்னணி சீர்குலைந்து காணப்படுகின்றது. அதாவது அந்த கட்சியை சேர்ந்த லால் காந்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என்கிறார்.

அதாவது கொரோனா அச்சுறுத்தலுக்கு  மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள் சிறந்தது மற்றும் இராணுவத்தின் சேவைகளும் பாராட்டுக்குரியது என அரசாங்கத்தை பாராட்டி பேசுகின்றார்.

ஆனால் மறுபுறம் அதேகட்சியை சேர்ந்த மற்றொருவரான பிமல் ரத்நாயக்க, இந்த அரசாங்கத்தினால்தான் இக்கட்டனான  சூழ்நிலை தற்போது நாட்டில் உருவாகியுள்ளது என கூறுகின்றார்.

அந்த கட்சியிலுள்ள மேலும் சிலர், அவர்கள் போக போக உயரத்துக்கு போகின்றனர். நாம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்கின்றனர்.

அதாவது இத்தகைய உறுப்பினர்களினால்தான் மக்கள் விடுதலை முன்னணி, தற்போது சீர்குலைந்து, கொத்து ரொட்டியைப் போன்று காணப்படுகின்றது

இதேவேளை தேர்தல் ஆணையகம், கொரோனா தொற்றை காரணம் காட்டி புதிய புதிய சட்ட விதிமுறைகளை  நடைமுறைப்படுத்துகின்றது.

இவ்வாறு தேர்தல் ஆணையகம் செயற்படுவதற்கு காரணம் என்ன? எதிர்க்கட்சிக்கு அலுவலகம் அமைப்பதற்கு இடம் இல்லாதமையே ஆகும்.

அதாவது தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது.

மேலும் எதிர்க்கட்சிக்கு முற்றிலும் பக்கச்சார்பாக தேர்தல் ஆணையகம் செயற்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.