பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இனிவரும் காலங்களிலும் குரல் கொடுப்பேன்- நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குரலாக எதிர்வரும் காலங்களிலும் இருப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) நுவரெலியா- கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது.

எனவே, இவ்விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்ட அமைச்சுக்கு கிடையாது. ஆகவேதான் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பணிகள் இடம்பெற வேண்டுமென கூறினேன்.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இவர்களுக்கு நாள் சம்பவம், ஆயிரம் ரூபாய் கிடைக்குமாக இருந்தால்  மிகவும் மகிழ்ச்சியடைந்து இருப்பேன்.

இதேவேளை, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப்பதவி அண்மையில்தான் வழங்கப்பட்டது.  எனவே  இனிவரும் காலங்களில் ஒரு தொழிற்சங்க தலைவராக நான் இந்த மக்களுக்காக போராடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.