வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் – துமிந்த

நாட்டில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடுகின்றோம், எதிர்க்கட்சியை துஷ்பிரயோகம் செய்யவோ, அல்லது அவர்களைப் பார்த்து சிரிக்கவோ அல்ல, நாட்டிற்குள் தேவையற்ற சட்டங்களை நீக்கி, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உலகின் பிற நாடுகளுக்கு முன்னர் மீண்டும் உருவாக்குவதே தங்களின் குறிக்கோள் என்றும் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.