சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை

கடந்த ஐந்து வருட காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் நீதி கேட்கின்ற பயணத்தை அவர்களாகவே முன்னெடுத்திருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை எந்த இடத்தில் முடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை.

சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்குடனே நான் அரசியலில் கால் பதித்தென் ஆனால், கடந்த ஐந்து வருட காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்