காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? – சுரேஷ் கேள்வி

காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்.

ஒரு விடயத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார் அதாவது சரனடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்னால் சரனடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரனடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்விட்டார்கள் என்று கூறினால் எவ்வாறு இறந்து போனார்கள்? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்?

ஆகவே ஒரு இராணுவ தாக்குதலின்போது, இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு அப்பால் ஒரு அரசாங்கத்திடம் சரனடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.