ஹோமாகமவில் 12 ரி-56 ரக துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

பாதாள உலகக்குழுக்களின் பயன்பாட்டில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம- பிடிபன  பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே  பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினராக தற்போது சிறையிலுள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.