முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிட வேண்டாம் எனக் கோரிக்கை!

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, சுகாதார அவசரகால நடவடிக்கைகளின்போது அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிப்பதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசியல்வாதிகள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி சரியான முறையில் தேர்தல் பிரசாரத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“சில தரப்பினர் தங்களது விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் முக்கவசங்களில் அச்சிட்டுள்ளதை அவதானித்தோம். இது ஏமாற்றமளிக்கிறது. சுகாதார நெருக்கடியின்போது இத்தகைய நடவடிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் வாக்காளர்கள் திகைத்துப் போவார்கள். எனவே, வேட்பாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.