வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

சகல தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுகள் அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அடுத்து வாரமளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியுமெனவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.