புளுக்குணாவி நீர்ப்பாசன நெற்செய்கை அறுவடை விழா!

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக அறுவடை விழா நிகழ்வு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) மாவடிமுன்மாரி கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டிருப்பு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நடைபெற்றது.

அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வில், மங்கலவிளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து, தேசியகீதம், அதிதிகளுக்கு தலைப்பாகை கட்டுதல், கதிர் அறுத்தல், போன்ற நிகழ்வுடன் அதிதிகள் உரை மற்றும் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.
புளுக்குணாவி பிரிவு விவசாயிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த அறுவடை விழாவின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.கணேசலிங்கம், மட்டக்களப்பு நீர்ப்பாசன பணிப்பாளர் S.M.B.M ஆஷார், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ரி.டினேஸ், மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் ஆகியோரும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.