அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு!

எதிர்வரும்  2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக  பொது நிர்வாக அமைச்சினால்   அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 11ஆம் திகதி சிவன் ராத்திரி விடுமுறையும் 28ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பெரிய வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறையும் மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தின விடுமுறையும், 14ஆம் திகதி ரமழான் விடுமுறையும், 26 மற்றும் 27ஆம் திகதி வெசாக் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜுன மாதம் 24ஆம் திகதி பொசன் போயா தின விடுமுறையும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறையும் 2ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி போயா தின விடுமுறையாகும். செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும், ஒக்டோபர் 19ஆம் திகதி நபிகள் பிறந்த நாள் விடுறையும் ஒக்டோபர் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி விடுமுறை மற்றும் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் 25ஆம் நத்தார் தின விடுமுறையும் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.