உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை எமக்கில்லை – அரசாங்கத்தரப்பு

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நல்லாட்சி  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பான  விசாரணைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இரகசியமான முறையில்  ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த  திட்டங்கள் தற்போது வெளிவந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அரசியல் சூழ்ச்சி, சேறுபூசல் ஆகியவற்றை முன்னெடுத்து ஆட்சியை  கைப்பற்றுவது பலவீனமான அரசாங்கத்தையே தோற்றுவிக்கும் என குறிப்பிட்ட செஹான் சேமசிங்க நாட்டுக்கு  பொருந்தும் வகையில் கொள்கைத் திட்டங்களை வகுத்துள்ளோம் என்றும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்