கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்

கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெர முனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்_திருகோணமலை மாவட்ட பெரமுன கட்சி வேட்பாளர் எஸ்.எம்.சுபியான்

பொதுத் தேர்தலில் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என விடை தேடுகிறோம்

என சிந்தித்து பார்த்தால் கடந்த கால அபிவிருத்திகள் அதற்கு சான்றாக அமைகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் தெரிவித்தார்.

தம்பலகாம பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன என்பது கடந்த காலத்தில் அதனோடு இணைந்த ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தது தற்போதைய பிரதமரே இதற்கு சான்றாக காணப்படுகிறார் மூன்று தசாப்த கால நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தத்தை ஒழித்து நாட்டை பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு இட்டுச் சென்றது மட்டுமல்லாமல் பொருளாதார துறைகள் இன்னோரன்ன பல முன்னேற்றங்களை நாடு கண்டது

அப்போதை பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி திறம்படச் செயற்பட்டார் அபிவிருத்திகளுக்கு பொறுப்பாக சகோதரர் பஷில் ராஜபக்ச தலைமை தாங்கியதன் நிமிர்த்தமே மஹிந்த குடும்பம் இப்படி வரவேற்கப்படுகிறது

மக்களை இவர்களை மதித்து ஆதரவுகளை வழங்கி ஜனாதிபதி தேர்தலின் போது அதிகாரத்தை வழங்கினார்கள். கிழக்கு மாகாண அபிவிருத்தியில் திருகோணமலையும் அபிவிருத்திகளை கண்டது கிண்ணியா, மூதூர் தொடக்கம் வரையிலான பாலங்கள் இறக்கக்கண்டி, புல்மோட்டை தொடக்கம் பாலங்கள் மிக நீண்ட கடல் மேல் பாலம் கிண்ணியாவில் அமையப் பெற்றதனால் தற்போது இலகுவான போக்குவரத்து துறை காணப்படுகிறது .

கடந்த நல்லாட்சி என்ற போர்வையில் சிறுபான்மை மக்களை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் பெரும்பான்மை சமூகத்துடன் உறவு முறையில் விரிசல்களையும் சிறுபான்மை மீது பல குற்றங்களையும் திணித்தார்கள்.

ஒரு அபிவிருத்தியினை செய்து விட்டு மூன்று மக்கள் பிரதிநிதிகள்  போட்டி போட்டுக் கொண்டு திறப்பு விழாவின் போது அடிதடிப்படுகிறார்கள் இப்படியாக பல பின்னடைவுகளை அடையச் செய்ததே ஒழிய நல்லாட்சியில் மக்களுக்கு சுபீட்சம் கிடைக்கவில்லை கல்வி அபிவிருத்தியில் 99 வலயங்களில் 98 ஆவது இடத்தை கிண்ணியா வலயம் பெற்றுள்ளது இது போன்று சுகாதார துறை வளர்ச்சியடைய வேண்டும் விவசாயத் துறை பொருளாதார துறையின் தீர்வு இந்த அரசாங்கம் மூலமாக நாம் தீர்வுகளை பெற வேண்டியுள்ளது இதை உணர்ந்து பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க கிராமிய மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

சுய இலாப அரசியலுக்காகவும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்குமே எதிர்க் கட்சியினர் சிறுபான்மை கட்சிகள் இணைந்து துவேசங்களை கக்குகிறார்கள் போலி பிரச்சாரங்களை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறார்கள்
ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் கொரோனா ஒழிப்பில் தீவிரமாக செயற்பட்டவர் அக்குரனை பேருவளை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் கூட கொவிட்19 தொடர்பில் விசேடமாக ஒழிக்க வேண்டும் என்ற ஒரே கருத்தை கொண்டவரும் ஆவார்.

சிறப்பான நிருவாக முறையினை கொண்டு செல்கின்ற தற்கால அரசாங்கத்துக்கு எதிர்க் கட்சியினரின் பொய் பிரச்சாரங்களை கவனத்திற் கொள்ளாது எதிர்காலத்தில் சுபீட்சம் மிக்க நாடாக கட்டியெழுப்ப எமது பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.