சாய்ந்தமருது தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா

பாறுக் ஷிஹான்

2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீமின்  தேர்தல் பிரச்சார அலுவலக திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை(28)  நடைபெற்றது.

வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வின்  பங்குபற்றுதலுடன்  இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, தேசிய காங்கிரஸ் சார்பான வேட்பாளர்களான  சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், சட்டத்தரணி கே.எல்.சமீம், தொழிலதிபர் ரீ.றஊப்,
ஆசிய அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னைநாள் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட ஆலோசகரும் பிரபல உயர்தர உயிரியல் பாட ஆசிரியருமான எம்.எஸ்.றிஷாத் ஷெரீப்,  எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ, சட்டத்தரணி எஸ்.எம்.என்.எஸ்.அஹமது மர்ஸூம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தனது கருத்தில்

இம்முறை சாய்ந்தமருது மக்களை மாத்திரமன்றி ஏனைய கிராம மக்களை மரமோ மயிலோ ஏமாற்ற முடியாது.அதனால் இத்தேர்தலில் எமது கட்சி நான்கு ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் பெறும் என்பது எமது நம்பிக்கையாகும்.கடந்த காலங்களில் ஜனாசா என்ற சொல்லை வைத்து சுறுக்கு இட்டுக்கொண்டவர்கள் தற்போது அதில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள்.எமது மக்களின் முன் சென்று கதைப்பதற்கு கூட பயப்பிடுவது மக்களுக்கு கிடைத்த வெற்றி தான் என்றார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், மீனவ மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் அத்துடன் பெரும்திரளான தேசிய காங்கிரஸ் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.