வவுனியாவில் திறக்கப்பட்ட பாடசாலைகள்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வவுனியாவிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் முகக்கவசங்களை அணிவித்த வண்ணம் அதிபர் , ஆசிரியர்கள் காலை வேலையிலேயே பாடசாலைக்கு வருகை தந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

கைகளை கழுவுவதற்கான வசதிகள் வவுனியாவில் சில பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பாடசாலைகளில் இவ் வசதிகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்