கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்.

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என்ற நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் குறித்த பகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு இவரது கடைக்கு வருகை தந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது எனது ஆதரவாளர்கள் எனது கோட்டை இது எனக்குரிய இடம், நீங்கள் இங்குள்ள மக்களை உங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்ல வேண்டாம் என்றவாறு மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாக வேலாயுதம் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் ஆதரவாளர்களால் வியாபார நிலையம் எரிக்கப்பட்ட நிலையில் இதன் வழங்கு இடம்பெற்று வந்தது.

இதனால் இவர்களினால் உயிர் பயத்தின் காரணமாக ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து நாட்டின் நிலைமை சிரான நிலையில் மீண்டும் வந்து வியாபார நடவடிக்கையினை ஆரம்பித்து வந்தேன். இந்த நிலையில் கடந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் சமாதானமாக செல்வோம் என்று கூறியதன் பிற்பாடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த அச்சம் கடந்த நிலையில் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் அச்ச நிலைமை ஏற்பட்டதன் காரணமாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.