யாழ் பிரதேச செயலரின் ஏற்பாட்டில் ஒஸ்மானியாவில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு…

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் இவ்வாரம் ஆரமபிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் பாடசாலைகளின் ஆரம்பம் கொவிட் 19 இற்குப் பின்னரான காலப்பகுதி என்பதனால் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கு தொற்று நீக்கும் பணிகள் முதன் முதலில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் உயர்திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் வழிகாட்டலிலே ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் ஜனாப். எம்.சேகுராஜிது அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் யாழ் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையில் படையினரால் பாடசாலைக்கான தொற்று நீக்கும் பணிகள் நேற்று (28) இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதான வகுப்பறைக் கட்டடத் தொகுதி, ஆரம்பப் பிரிவு வகுப்பறைக் கட்டடத் தொகுதி, பிரதான மண்டபம், உள்ளக மைதானத் தொகுதி, வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள், விஞ்ஞான ஆய்வு கூடத் தொகுதிகள், பாடசாலை முன்றல் என்பன பூரணமாக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

பாடசாலை சமூகத்தின் அழைப்பை ஏற்று எமது பாடசாலைக்கும் தொற்று நீக்கல் சேவையை வழங்கிய யாழ்ப்பாணம் பிரதேச செயலர் உயர்திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கும், தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் பாடசாலை சமூகம் சார்பிலும், முஸ்லீம் சமூகம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்