பாதுகாப்பு விடயத்தில் தமிழர் சிங்களவர் என்ற இரட்டை நிலைப்பாடு ஏன் ?வைத்தியகலாநிதி சிவமோகன் கேள்வி…

கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி தமிழர் வாழும் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மதவாச்சியை கடந்தால் இல்லை பாதுகாப்பு விடயத்தில் அரசு   தமிழர் சிங்களவர்  பாரபட்சம் காட்டுவது ஏன் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேள்வி  எழுப்பியுள்ளார்
  மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கு சென்று மக்களை சந்தித்தபோது அங்குள்ள நிலமைகளை அவதானித்த பின் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்
 இது தொடர்பாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
கொரோனா வைரஸ் பிரச்சனை நாடு  முழுவதும் உள்ளது  ஆனால் பாதுகாப்பு கெடுபிடி வடபகுதிக்கு மட்டும் ஏன்? தமிழர் பிரதேசங்களில்   உள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மதவாச்சியை கடந்தால் இல்லை ஆனால் அதிகமான கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது தென்னிலங்கைப்பகுதியில்  உண்மையில் இந்த பாதுகாப்பு இறுக்கமான நடை முறை இருக்க வேண்டியது தென்னிலங்கையில் அப்படி இருக்கையில் இந்த விடயத்தில் தமிழர் பிரதேசங்களுக்கு மாத்திரம் பாரபட்சம்  காட்டப்படுவது ஆரேக்கியமான விடயம் அல்ல
எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும்  நடைபெறுவதற்கு தடையாக இந்த பாதுகாப்புப் படையினரே இருக்கப்பபோகின்றார்கள் ஏன் எனில் கொரோனாவை காரணம் காட்டி முன்பை விட அதிகமான சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை என்னும் பெயரில் ஆயுதம் தரித்தவர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றார்கள் இதன் காரணமாக மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க  முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது

எனவே அரசாங்கம் கொரோனா வைரஸ் மற்றும் நோய் தொடர்பான அனைத்து விடையங்களையும் சுகாதாரத் தறையினரிடன் கையளித்து விட்டு சுகாதாரத்துறையினரின் விடயங்களில் தலையிடும் படையினரின் அதிகாரத்தை மீளப் பெற வேண்டும்
தமிழர் பிரதேசங்களில் காணப்படும் சோதனைச்சாவடிகளை அகற்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்   அப்போதுதான் தமிழ் மக்கள் எந்த ஒரு அச்ச உணர்வும் இன்றி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.