தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வீட்டுச்சின்னத்தின் வாக்குகளை அதிகரிக்க பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளை நிர்வாக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளையின் நிர்வாக கூட்டம் இன்று 28/06/2020 பி.ப 4, மணியளவில் கிழக்கு  மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசாவின் கோட்டைகல்லாறு இல்லத்தில் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவர் பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் அனைவரையும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பதற்கான பொதுவான பிரசாரத்தை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்எடுக்கவேண்டும் எனவும் இதுதொடர்பாக தமழ்தேசிய்கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இணைத்து பிரசாரங்களை முன்எடுக்கவேண்டும் என ஏகமனதாக்தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரங்களை முன்எடுப்பதால் அவர்களின் பிரசாரங்களை முறியடித்து பொதுவாக வீட்டுச்சின்னத்திற்கு வாக்குகளை அதிகரித்து நான்கு உறுப்பினர்களை இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெறும் நோக்கில் முழுக்கவனமும் செலுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மண்முனை தென்மேற்கு பிரதேச சமை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், மண்முனை தென் எருவில் பிரதேச சபை உப தவிசாளர் ரஞ்சினி, பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி பொருளாளர் நடராசா, மட்டக்களப்பு மாவட்ட்மகளீர் அணி தலைவர் தேவமணி, மோரதீவு பற்று இலங்கை தமிழரசு கட்சி பிரதேச கிளை தலைவர் கந்தசாமி, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நகுலேஷ்வரன், மண்முனை தென் எருவில் பிரதேச இலங்கை தமிழரசுகட்சி கிளை செயலாளர் இராஜேந்திரன் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி செயலாளர் துஷ்யந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.