சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்- பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்றவர்கள் காரணமாகவே அவ்வப்போது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகின்றனர்.

எனினும் அவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கவனித்துக் கொள்வது நமது கடமையாகும்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தனிமைப்படுத்தல் மையங்களிலும் உள்ளவர்களை, கண்காணித்து கொள்வதற்கு பெரும்பாலான இராணுவத்தினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து மக்களும் அன்றாட சுகாதார நடைமுறைகள் குறித்து  நன்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும்  சமூகத்தின் நலன்களுக்காக சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள கைக்கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்” என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.