வெள்னை வான் விவகாரம்: பிணை கோரிக்கை மனுவை ராஜித மீள பெற்றார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து அவரது சட்டத்தரணி, இன்று (செவ்வாய்க்கிழமை) மீள பெற்றுக்கொண்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் பிணையில் விடுவிக்க வேண்டுமென கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது சட்டத்தரணி ஊடாக பிணை கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், முன்னாள் சந்தேகநபர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணி, இந்த மனுவை தொடர விரும்பவில்லை என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பிணை கோரிக்கை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம், ராஜிதவின் சட்டத்தரணியிடம் மீள கையளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.