சம்மாந்துறை பிரதேச சபையினால் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது…

சம்மாந்துறை பிரதேச சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை விவசாயத் திணக்களத்தின் வழிகாட்டுதலில்  அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கில்
சென்னல் புர சந்தை வளாகம் மற்றும்  சனசமூக நிலைய வளாகம் ஆகியவற்றில்  உப பயிர் செய்கை திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான    எஸ். நளீம், எம்.ரீ.பெளசுள்ளாஹ், ஏ.எம்.றியாஸ், கே.எம்.இம்பவதி, எம்.எஸ்.சரீபா, எஸ்.எம்.சித்தி நிலுவ்பா, கே.எல்.சிஹாமா, சம்மாந்துறை  விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஐ.எல்.பெளசுல் அமீன், மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ.கரீம், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், உள்ளிட்ட பிரதேச  சபை, விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.