வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் – அங்கஜன்

வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையாக மாறியது என்று அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார். கல்வியங்காட்டு பகுதியில் (29) அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் இல்லாத போதும் பொறுப்பு கூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்களுக்கு கடந்த ஐந்து வருடத்தில் சேவையாற்றியுள்ளேன்.

உரிமை என்பது எமது இரத்ததுடன் கலந்த ஒன்றே! நாம் அன்று எதிர்பார்த்தது உரிமையை மட்டுமே இன்று எமது எதிர்பார்ப்பு உரிமைகளுடன் கூடிய அபிவிருத்தி பயணமே! என்பதே எனது கருத்தாகும். எமது இனத்தின் இருப்பையும் எமது இனத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி உருவாகியுள்ளது. தீர்வு தீபாவளிக்கு வரும் பொங்கலுக்கு வரும் என கூறி ஒன்றும் வரவுமில்லை கூறியவர்கள் மூலமாக இனி வரப்போவதுமில்லை.

எம் ஏக பிரதிநிதி என கூறுபவர்கள் அபிவிருத்தி திட்டங்கள் என பெரிதாக எதையும் செய்யவுமில்லை அவ்வாறு செய்த ஆறுதல் பரிசான கம்பெரெலியா திட்டம் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுமாகவும் இல்லை. இதுவரை காலங்களும் இருந்த எமது தமிழ் தலைமைகளால் எம் மண்ணில் சிறந்து விளங்கிய துறைகளில் எல்லாவற்றிலும் கடைநிலையிலேயே உள்ளோம்.
விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், பொருளாதாரத்தில், இப்போது கல்வியிலும் கடைசி எமது கடைசி சொத்தான கல்வியும் கை நழுவி போய்விட்டது.

நான் 2010 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது எட்டு லட்சத்து பதினெட்டாயிரம் வாக்காளர்கள் இருந்தனர். ஆனால்  பத்து வருடமாகி விட்ட நிலையில் சனத்தொகை வீதம் அதிகரத்திருக்க வேண்டும் ஆனால் குறைவடைந்து  ஐந்து லட்சத்து எழுபதாயிரம் வாக்காளர்களாக மாறியுள்ளது. இதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் வாக்காளர்கள் குறைந்தால் மக்கள் பிரதிநிதகள் குறைவார்கள் ! வரும் நிதி குறையும் ! வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறையும் , கடந்த காலங்களை போன்று இனி வரும் காலங்களிலும் எமது சனத்தொகை குறைந்தால் நெடுங்காலமாய் ஆசைப்பட்ட உரிமைகள் எதற்கு ? உரிமைகள் கிடைத்தால் அனுபவிப்பது யார் ? எமது இருப்பை தக்க வைப்பது யார் ? எமது இளைஞர்களின் எதிர்காலம் என்ன? அவர்களுக்கு வழிகாட்டுவது யார் ?
வேலை வாய்ப்பு சுயதொழில்களை பெற்றுக்கொடுப்பது யார் ? அவற்றை வழிகாட்ட உதவிகள் புரிய சிறந்த தலைமைத்துவம் வேண்டும்.

பிரதி சபாநாயகர் பதவி எனக்கு வருவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை அதுவும் நல்லது அதனாலே பிரதி கமத்தொழிழமைச்சு பதவி கிடைத்து மக்களுக்கு சேவையாற்றினேன். வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையாக மாறியது.

எம் ஏக பிரதிநிதிகள் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிபட்ட அரசியல் நோக்கங்களையே நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைவதற்கு நிபந்தனையாக வைத்தது. அரசியல் கைதிகளின் விடுதலையோ வழி தவறி போகும் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையோ அபிவிருத்தி திட்டங்களையோ தமிழ் மக்களுக்கான தீர்வையோ வைத்திருக்கலாம் ஆனால் வைக்கப்ட்டது தமக்கான அரசியல் தேவைகளையே!

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது இன்றைய ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் வெள்ளைவான் வரும் முதலை வரும் என கூறினார்கள் ஆனால் அவை வரவில்லை வந்தது கொரானா நோய் உலகம் முழுவதும் தாண்டமாடியது. உயிரிழப்புக்கள் ஏராளம்
ஆனால் இலங்கையில் இழப்புக்கள் குறைவு காரணம் ஒன்று இறைவன் மற்றையது தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்த அரசாங்கம்.

அவர்களுடைய அரசாங்கமே இனி வரும் ஐந்து வருடங்கள் இருக்க போகிறது.
அவர்களுடன் இணைந்து எமக்கானவற்றை பெற்றுக்கொள்ளல் அல்லது வழமை போன்று “இவர்கள் வேணாம்” “தீர்வு மட்டுமே வேணும்” என கேட்கலாம் இவற்றில் எது எங்களுக்கு வேணும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இனி வரும் இந்த ஐந்து வருடத்தில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று நாட்டின் சிறந்த பிரதேசங்களாக திகழ வேண்டும். பொறுப்புக்கூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினராக என்னை ஆதரித்து வெற்றி பெற வையுங்கள். அபிவிருத்தி பயணத்திற்கு தயாராகுவோம் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.