திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்  நிகழ்வு திருகோணமலையில்  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை  திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில்  இடம்பெற்றது.

இந்த அறிமுக நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிவன் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுப்பட்ட பின்னர் “தமிழர் உரிமைகளை மீட்கவும், அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்போம்” எனும் தொனிப்பொருளில் அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.