தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடும்- ஜே.வி.பி

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் டில்வின் சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என கூறி வந்தவர்கள். தற்போது அந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், எம்.சி.சி உடன்படிக்கை நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே அதனை தீயிட்டு கொழுத்த வேண்டுமென முழக்கம் இட்டனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள்தான், குறித்த  எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்