பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் உபுல் தரங்க

இலங்கை கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காலை இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையிலேயே அதுகுறித்து உபுல் தரங்கவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்