கல்முனை எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்துமீறல்! – குபேரன் குற்றச்சாட்டு

கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள்,  களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென  கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று (புதன்கிழமை) மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது கல்முனையின் வடக்கு எல்லை சர்ச்சை தொடர்பில் பிரஸ்தாபித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் ”களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் செயலகமும் எமது மாநகர சபை எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

‘இதனால் அப்பகுதிகளில் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படுகிறது. ஆகையால்  இந்த எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளை எமது மாநகர மேயர் விரைவுபடுத்த வேண்டும்’ என்றும் குபேரன் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.