விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சி- முல்லைத்தீவு இளைஞரிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்தார் என்ற  குற்றச்சாட்டில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

குறித்த சம்பவத்தில்   முல்லைத்தீவு- கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த  25 வயதுடைய நவரத்தினம் டிலக்சன் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினர் வசம் உள்ள தங்களது காணிகளை மீட்டெடுக்க முன்னெடுத்து வரும் போராட்டங்களில் பங்கெடுத்துவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒருவரும் ஆவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்,  குறித்த இளைஞரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரை கைது செய்து, கிளிநொச்சியிலுள்ள  பயங்கரவாத விசாரணை தடுப்பு பிரிவுக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவரை கைது செய்வதற்கான காரணம் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வீட்டாரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கையளித்தனர்

குறித்த அறிக்கையிலேயே புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.