அரசாங்கம் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது

அரசாங்கம் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணி ஒன்றில் கருத்து தெரிவித்த காட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது இராணுவ வீரர்கள் வீடுகளுக்குச் சென்று வேலைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

இல்லையென்றால், இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இராணுவத்தினர் ஒருபோதும் அரசியலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர் இன்று இத்தகைய தவறுகள் நடைபெறுகின்றன என்றும் அதற்கு அவர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.