பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கு ரணில்- சஜித் காரணமாக இருப்பார்கள்- விஜயதாச

நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கான சூழ்நிலையை ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்படுத்தி தந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது தொடர்பாக எமக்கு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு குழப்பம் இருந்தது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாக பிளவடைந்து, 20 இலட்சம் வாக்குகளை சிதறடித்துள்ளமையால், எமது தரப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதியாகியுள்ளது.

இதற்காக நாம் உண்மையில், ரணிலுக்கும் சஜித்துக்கும் நன்றிகளைத் தெரிவித்தே ஆகவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.