7 கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் அதிரடியாக கைது

ஹோமாகம பகுதியில் வீடொன்றின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 07 கை குண்டுகள், இரண்டு குண்டு துளைக்காத கவசங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போதே குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 7 கைக்குண்டுகள், துப்பாக்கி, அதற்கான 4 ரவைகள், குண்டு துளைக்காத கவசங்கள் இரண்டு மற்றும் 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சார்ந்த 77 ரவைகள் மற்றும் இனங்காணப்படாத 4 ரவைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடானது அண்மையில் 12 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமாகம, பிட்டின பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரது கள்ளக்காதலிக்கு உரித்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.