கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் எழுதிய ‘கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா’ நேற்று(30) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய அத்தனை தகவல்களையும் தொகுத்து எழுதப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழுள்ள நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமே இந்த ஆவண தொகுப்பு நூலை முதன் முதலாக வெளியீடு செய்துள்ளது.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தாய் சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் தொற்றா நோய்த் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்து மாதுக்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் நூலாசிரியரினால் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.