நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்!

பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.