வவுனியாவில் 6 வருடமாக சிறப்பாக இயங்கும் கல்வி நிறுவனம்!

வன்னி மண்ணில் வவுனியா மாவட்டத்தில் வைரவபுளியங்குளம் – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த 05வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த லிங்கன் கல்வி (Lincoln college) தற்போது 6வது வருடத்தில் காலடி பதிக்கின்றது.

கடந்த 2016ம் ஆண்டு சு.பார்த்திபன் B.A (ஆசிரியர்) அவர்களின் தனி முயற்சியில் வவுனியா வைரவபுளியங்குளம் – பண்டாரிக்குளம் பகுதியில் லிங்கன் கல்வி நிலையம் (Lincoln college) ஆரம்பிக்கப்பட்டது. லிங்கன் கல்வி நிலையத்தில் (2016- 2020) ஆண்டு வரையிலான ஜந்து வருட காலப்பகுதியில் 3000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும் பதவி வகித்து வருகின்றனர்தமிழ் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தினை போதித்து அவர்களில் உயர் பதிவிகளை வகிக்க வைக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் தற்போது 06வது வருடத்தில் காலடி பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் லிங்கன் கல்வி நிலையத்தின் (Lincoln college) ஸ்தாபர் சு.பார்த்திபன் அவர்களின் சகோதரரின் (சு.பிரதீப்) வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களும் ஆங்கிலத்தில் திறமையடைய வேண்டும் என்ற எண்ணக்கருவில் அவர்களுடைய கற்றல் நடவடிக்கைக்காக லிங்கன் பவுண்டேசன் (Lincoln Foundation) என்ற அமைப்பினை ஆரம்பித்து 500க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச ஆங்கில கல்வியினை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குரிய உபகரணங்கள் , நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.