கருணா அம்மானின் தலையீட்டினால் 13 குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு இடமாற்றம்

மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு  மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்திற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் நாடாளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மானின்  தலையீட்டினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மத்திய மாகாணத்தில் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிய குறித்த குடும்ப நல மருத்துவ மாதுக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட கருணா அம்மான், தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு  இடமாற்றங்களை  பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் பெற்று வந்தவர்களில் நால்வர் முஸ்லீம்கள் என்றும்  ஒன்பது பேர் தமிழ்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.