கரவெட்டி திருமண மண்டபத்தில் நிகழ்வுகளை நடாத்த 14 நாட்கள் தடை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றிற்கே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது விருந்தினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியமை, விருந்தினர்கள் முகக் கவசம் அணியாதிருந்தமை மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமல் முன் அனுமதியின்றி நிகழ்வை நடத்தியமை ஆகிய குறைபாடுகளுக்காக 14 நாட்கள் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்