மாலைதீவிலிருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று (வியாழக்கிழமை) அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்