போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 11 பேர் கைது – நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 11 அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 11 அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்